/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 9ம் வகுப்பு படிக்க அரசுப்பள்ளி இல்லாத அவல நிலை
/
ராமநாதபுரத்தில் 9ம் வகுப்பு படிக்க அரசுப்பள்ளி இல்லாத அவல நிலை
ராமநாதபுரத்தில் 9ம் வகுப்பு படிக்க அரசுப்பள்ளி இல்லாத அவல நிலை
ராமநாதபுரத்தில் 9ம் வகுப்பு படிக்க அரசுப்பள்ளி இல்லாத அவல நிலை
ADDED : மே 19, 2024 11:23 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் 8ம் வகுப்புக்கு மேல் படிக்க மாணவர்களுக்கு அரசுப்பள்ளி இல்லாததால் நீட் தேர்வில் கிடைக்கும் உள்ஒதுக்கீடு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரில் மாணவர்கள், மாணவிகள் கல்வி பயிலும் வகையில் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளி, எம்.எஸ்.கே., நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
மாணவிகள் மட்டுமே கல்வி பயிலும் வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
எட்டாம் வகுப்பு வரை இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க எந்த அரசுப்பள்ளியும் இல்லை.
ஏதேனும் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஏழை மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்க முடியாததால் நீட் தேர்வில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவுதகர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான மாவட்ட கல்வி அலுவலர் ஆஜரானார்.
அவர், வள்ளல் பாரி நகராட்சிப் பள்ளியை 2021--22 கல்வியாண்டில் தரம் உயர்த்தக்கோரி பள்ளிக்கல்வி ஆணையருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஓராண்டு காலத்திற்குள் பள்ளியை தரம் உயர்த்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று வரை ராமநாதபுரம் நகர் பகுதியில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கான அரசுப்பள்ளி திறக்கப்படவில்லை.
முதல்வர் தலையிட்டு உடனடியாக இந்தப் பகுதியில் மாணவர்களுக்கான 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க அரசுப்பள்ளி திறக்க வேண்டும் என வழக்கறிஞர் பா.முருகேசன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.------

