/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 8 நாட்களுக்கு பின் ராமநாதபுரம் வந்தடைந்தது
/
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 8 நாட்களுக்கு பின் ராமநாதபுரம் வந்தடைந்தது
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 8 நாட்களுக்கு பின் ராமநாதபுரம் வந்தடைந்தது
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 8 நாட்களுக்கு பின் ராமநாதபுரம் வந்தடைந்தது
ADDED : மே 19, 2024 03:41 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு வழியாக பெரிய கண்மாய் பகுதிக்கு 8 நாட்களுக்குப் பிறகு நேற்று வந்தடைந்தது.
வைகை அணையில் இருந்து மே 10 முதல் 14 வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல் 2 நாட்கள் 259 மில்லியன் கன அடி,3--வது நாள் 172, 4--வது நாள் 129 ம், 5--வது நாள் 94 மில்லியன் கன அடி என 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்திபனுார் வந்தடைந்தது. அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் வலது இடது பிரதான கால்வாய்களுக்கும், கூத்தங்கால் கால்வாய்க்கும், மேல நாட்டார், கீழ நாட்டார் கால்வாய்களுக்கும் திறந்துவிடப்பட்ட நிலையில் மீதம் உள்ள தண்ணீர் நேற்று மதியம் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.
வைகை அணையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் 3 நாட்களுக்கு தொடர்ந்து ராமநாதபுரம் வந்து சேரும். 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்கிய நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வறண்ட நிலையில் இருந்தது.
வைகை தண்ணீர் வரவால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் நீர் பரவலாக பரந்து விரிந்து காணப்படுகிறது.
ஏறத்தாழ வைகை தண்ணீரை வைத்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 2 அடி தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வைகை அணை நீர் வரவால் வைகை வரத்து கால்வாய் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்ஆதாரங்களுக்கான குடிநீர் கிணறுகளில் தண்ணீர் ஊற்று அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

