/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் ரூ.5 கோடி செலவில் படகு புதுப்பிக்கும் பணி மும்முரம்
/
பாம்பனில் ரூ.5 கோடி செலவில் படகு புதுப்பிக்கும் பணி மும்முரம்
பாம்பனில் ரூ.5 கோடி செலவில் படகு புதுப்பிக்கும் பணி மும்முரம்
பாம்பனில் ரூ.5 கோடி செலவில் படகு புதுப்பிக்கும் பணி மும்முரம்
ADDED : மே 19, 2024 04:54 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் விசைப்படகுகளை ரூ. 5 கோடி செலவில் பழுது நீக்கி புதுப்பிக்க மீனவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் 8000 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நேரத்தை பயன்படுத்தி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிப்பது வழக்கம்.
அதன்படி நேற்றுடன் 33 நாட்கள் தடைகாலம் முடிந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகுகளில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் 90 விசைப்படகுகளை பாம்பனில் மீனவர்கள் கரையில் ஏற்றி வருகின்றனர்.
பராமரித்து புதுப்பிக்கவும், புதிய வலைகள் மற்றும் மீன்பிடி தளவாடப் பொருட்கள் வடிவமைக்கவும் ஒரு படகுக்கு ரூ. 5 லட்சம் செலவாகும். அதன்படி ரூ. 5 கோடி செலவில் படகுகளை புதுப்பிக்க செலவாகும் எனவும், இன்னும் 27 நாட்களில் புதுப்பித்து ஜூன் 15ல் மீன்பிடிக்க செல்ல வேண்டும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

