/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரயில்வே நடைமேடையை நீட்டித்து அதிக பெட்டி இணைக்க வேண்டும்

ADDED : ஏப் 15, 2024 12:28 AM
ராமநாதபுரம், - ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, திருப்பதி, சென்னை, ஓகா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஹீப்ளி, புவனேஸ்வர், செகந்திராபாத் ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் ராமநாதபுரம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களில் 21 பெட்டிகள் மட்டுமே உள்ளன.
ராமநாதபுரத்தில் இருந்து முன் பதிவு செய்ய செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக ரயிலில் பயணிக்கும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வட மாநிலங்களில் ஒரு ரயிலில் அதிகபட்சமாக 26 பெட்டிகள் வரை இணைக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் 22 பெட்டிகள் மட்டுமே அதிகளவில் உள்ளன. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 26 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்தவதற்கான நடை மேடையை நீட்டிக்க வேண்டும்.
தற்போது மின் மயமாக்கப்பட்டு வருவதால் ரயில் பெட்டிகளை அதிகரிப்பதில் சிரமம் இல்லை. ரயில்வே நிர்வாகம் பெட்டிகளை அதிகரித்து ரயில்களை இயக்க வேண்டும்.----------