/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டையன் வலசையில் ஊருணி நடுவில் ஆபத்தான மின்கம்பம் கண்டுகொள்ளாத மின்வாரியம்

ADDED : ஏப் 25, 2024 05:33 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி கட்டையன்வலசையில் 4 ஏக்கரில் ஊருணி அமைந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன் ஊருணி நடுவில் மின்கம்பம் ஊன்றப்பட்டு அதில் இருந்து மின் விநியோகம் இதர கிராமங்களுக்கு செல்வதால் ஊருணியில் குளிக்கும் மக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
கட்டையன் வலசை கிராம மக்கள் கூறியதாவது:ஊருணி நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தால் மின் விபத்து அபாயம் நிலவுகிறது. உயரழுத்த மின்கம்பி தாழ்வாகச் செல்கிறது.
மழைக்காலங்கள் மற்றும் அதிக காற்றடிக்கும் நேரங்களில் உயர் அழுத்த மின்கம்பி ஊருணியில் உள்ள நீரில் விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து மின்வாரியத்தில் பலமுறை தெரிவித்துள்ளோம். இதுவரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே ஊருணியின் நடுவில் ஆபத்தான மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.