/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நல்லிருக்கையில் குறைவான ஆழத்தில் பதிக்கப்படும் ஜல்ஜீவன் திட்ட குழாய்

ADDED : ஏப் 01, 2024 10:15 PM
உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை ஊராட்சியில் மூன்று மாதங்களாக மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
நல்லிருக்கை ஊராட்சியில் 2500 க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக பைப் லைன் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிப்பதற்கான பணிகள் நடக்கிறது.
இங்கு குறைவான ஆழத்தில் பைப்புகள் தோண்டப்பட்டுள்ளதால் விரைவில் சேதமடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நல்லிருக்கை பா.ஜ., விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை நல்லிருக்கை ஊராட்சியில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ள ஆழத்தை காட்டிலும் மிகக் குறைவான ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய திருப்புல்லாணி ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். பொது மக்களுக்கு வீடுகள் தோறும் முறையாக குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.