/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகம் உயர் கல்வியில் அபாரவளர்ச்சி துணை வேந்தர் ரவி தகவல்
/
தமிழகம் உயர் கல்வியில் அபாரவளர்ச்சி துணை வேந்தர் ரவி தகவல்
தமிழகம் உயர் கல்வியில் அபாரவளர்ச்சி துணை வேந்தர் ரவி தகவல்
தமிழகம் உயர் கல்வியில் அபாரவளர்ச்சி துணை வேந்தர் ரவி தகவல்
ADDED : ஆக 12, 2024 03:50 AM

ராமநாதபுரம் : உலகளவில் இந்திய உயர்கல்வியில் 27.1 சதவீதம் பேர் கல்வி பயில்கின்றனர். இதேபோல் தமிழகம் இருமடங்கு அபாரவளர்ச்சி அடைந்து 54 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர் என காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ஜி.ரவி பேசினார்.
ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து 120 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லுாரி முதல்வர் மீரா வரவேற்றார்.
துணை வேந்தர் ரவி பேசியதாவது: மாணவிகள் தங்களுக்குள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் சுதந்திரம் பெற்ற போது 20 பல்கலைகளும், 500 கல்லுாரிகள் ஒரு மில்லியன் மாணவர்கள் கல்வி பயின்றனர். தற்போது இந்தியாவில் 1026 பல்கலைகளும் 45 ஆயிரம் கல்லுாரிகள் உள்ளன. உலகளவில் இந்திய உயர்கல்வியில் 27.1 சதவீதம் பேர் கல்வி பயில்கின்றனர்.
தமிழகத்தில் மத்திய அரசினை போல் இரு மடங்கு உயர்ந்து 54 சதவீதம் பேர் உயர் கல்வி படிக்கின்றனர். இந்த அபார வளர்ச்சியினை பெறுவதற்கு சிறுபான்மையினர் தொடங்கிய கல்வி நிறுவனங்கள் தான் காரணமாகும்.
மாணவர்கள் முதலில் தொழில் முனைவோர். இரண்டாவது தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் பதவிகளுக்கு செல்வது. அரசு பணிகளுக்கு செல்வது, மூன்றாவதாக ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் அதில் பயணிக்கலாம். மாணவர்கள் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றார்.
விழாவினை அராபிக் துறைத்தலைவர் ரெய்ஹானத்தில் அதவியா, கணினி அறிவியல் துறைத்தலைவர் கிருத்திகா பங்கேற்றனர்.

