/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை மழையால் தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு
/
கோடை மழையால் தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு
கோடை மழையால் தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு
கோடை மழையால் தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு
ADDED : மே 19, 2024 03:36 AM
தேவிபட்டினம் : கோடை மழையால் மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக தேவிபட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, சித்தார்கோட்டை, நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பள பாத்திகள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
பொதுவாக மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை காரணமாக செப்., முதல் டிச., வரை முற்றிலும் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும். மற்ற மாதங்களில் சீதோஷ்ண நிலையை பொறுத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி வழக்கமாக அதிகரிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமையவில்லை. இதனால் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி இல்லாததால் தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான உப்பளத் தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிப்படைந்துள்ளனர்.

