/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை தேர்வு செய்தால் வாழ்க்கையில் வெற்றி கலெக்டர் அறிவுரை

ADDED : மே 17, 2024 07:13 AM

ராமநாதபுரம் : பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களது விருப்பப்படி உயர்கல்வியை தேர்வு செய்தால் வாழ்வில் வெற்றிபெறலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாயில்நான் முதல்வன்- கல்லுாரிக் கனவு 2024 திட்டத்தில்மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி.,சந்தீஷ் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் பேசுகையில், கல்வியை மட்டும் ஊக்குவிக்காமல்மாணவர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும். மாணவர்கள் தங்களது விரும்பும் துறை,அதற்கேற்ற உயர்கல்வி பாதையை தேர்ந்தெடுங்கள்.வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார்.
கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங்,மாவட்ட வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகார்,டி.எஸ்.பி., சபரிநாதன், முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்விஅலுவலர்கள் தனியார் பள்ளிகள் நாகேந்திரன், இடைநிலை சுதாகர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.