/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வினாத்தாள் குளறுபடி மாணவர்கள் தவிப்பு
/
வினாத்தாள் குளறுபடி மாணவர்கள் தவிப்பு
ADDED : ஏப் 03, 2024 01:26 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில், தொடக்க கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நேற்று முதல், மூன்றாம் பருவ தேர்வுகள் துவங்கியுள்ளன.
இதில், மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப, சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்கள் அரும்பு; சராசரி மாணவர்கள் மொட்டு; சிறப்பான மாணவர்கள் மலர் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர்.
கடந்த இரு பருவங்களில் தனித்தனி வினாத்தாள்கள் வழக்கப்பட்டு, மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
மூன்றாம் பருவ தேர்வில் அரும்பு, மொட்டு, மலர் என தனித்தனியாக வினாத்தாள் வழங்கப்படுவதற்கு பதில், ஒரே வினாத்தாள் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால், மெல்ல கற்கும் மாணவர்கள், இந்த வினாக்களுக்கு பதில் எழுத முடியாமல் தவித்தனர்.

