/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பஜாரில் பெருக்கெடுத்த கழிவு நீர்
/
ராமநாதபுரம் பஜாரில் பெருக்கெடுத்த கழிவு நீர்
ADDED : மே 23, 2024 03:08 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் ரோடுகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை நிறைந்து மேன் ேஹால்கள் வழியாக வெளியேறி ரோடுகளில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் இதுபற்றி கண்டு கொள்வதில்லை. இது போன்ற சாக்கடைகள் நிரம்பி வழியும் புகார்கள் குறித்து அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக ரோடுகளில் ஆறாக ஓடும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
நேற்று ராமநாதபுரம் நகைக்கடை பஜார் பகுதி, தொண்டி ரோட்டில் உள்ள கேணிக்கரை பகுதியில் பாதாள சாக்கடை ஆறாக ரோட்டில் ஓடியது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கழிவு நீர் கலப்பதால் எளிதில் நோய் பரவம் நிலை உள்ளது.பாதாள சாக்கடைகள் நிரம்பி வழியும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

