/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரோட்டில் ஆறாக ஓடும் கழிவு நீர்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

ADDED : ஏப் 23, 2024 10:57 PM

ராமநாதபுரம், - ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீதிகளில் ஆறாக ஓடி குளம் போல தேங்குவதால் துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த குழாய்கள் தொடர் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, அடைப்புகள் காரணமாக கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.
குறிப்பாக சில நாட்களாக தினமலர் நகர், அகில் கிடங்கு வீதி ஆகிய இடங்களில் ரோட்டில் கழிநீர் தேங்குகிறது.புகாரின் போது பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர்.
மீண்டும் அன்று இரவே குளம்போல கழிவுநீர் தேங்கி விடுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.