/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் ; தொற்று நோய் அச்சத்தில் மக்கள்
/
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் ; தொற்று நோய் அச்சத்தில் மக்கள்
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் ; தொற்று நோய் அச்சத்தில் மக்கள்
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் ; தொற்று நோய் அச்சத்தில் மக்கள்
ADDED : ஏப் 09, 2024 12:08 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு விநாயகர் கோயில் முன்பு கால்வாயில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி பகுதி கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் சாலையோரங்களில் கால்வாய் அமைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
முதுகுளத்துார் -- பரமக்குடி ரோடு விநாயகர் கோயில் முன்பு கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதன் அருகில் பாரத ஸ்டேட் பாங்க், பஸ்ஸ்டாப் இடமாக இருப்பதால் தினமும் மக்கள் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். எனவே பேரூராட்சி பணியாளர்கள் கால்வாயில் உள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.