/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்
/
பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்
பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்
பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்
ADDED : செப் 01, 2024 05:07 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஆத்மசாமி நகர் 2-வது தெரு வடக்கு பகுதியில் பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம் உள்ளது.
மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஆத்மசாமி நகர் 2-வது தெரு வடக்கு பகுதியில் தெருவில் பனை மரங்கள் உள்ளன.
இந்த பனை மரங்களின் மீது உயரழுத்த மின் கம்பிகள் உரசுவதால் அடிக்கடி இப்பகுதியில் தீப்பொறி ஏற்படுகிறது.
இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் இந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயரழுத்த மின் கம்பி பனை மரத்தில் உரசாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.