/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதரவற்ற முதியோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
/
ஆதரவற்ற முதியோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
ADDED : ஆக 12, 2024 03:30 AM
ராமநாதபுரம் : -ராமேஸ்வரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று இருந்த இரு முதியவர்களை மீட்டு உரிய சிகிச்சை வழங்கி முதியோர் காப்பகத்தில் தாய்ப்பாசம் அறக்கடளையினர் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரம் கோயில் பகுதியில் யாசகம் பெற்று வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி 91, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை மீட்டு தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாத்திமா 75, என்ற மூதாட்டியும் நோய்பட்டு இருந்தார்.
அவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருவரும் உடல் நலம் தேறிய நிலையில் அவர்களை தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா தேவகோட்டையில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தார்.

