/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் மின்விளக்குகள் பழுது: இருட்டால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

ADDED : மார் 04, 2024 05:11 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால், இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவுநேரத்தில் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர்.
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமான பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 அக்., 2ல் திறக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலம் இருபுறமும் 400க்கு மேலான மின்விளக்குகள் இருந்தது. துவக்கத்தில் மின்விளக்குகள் பராமரிக்கப்பட்டு பாலம் மின்னொளியில் ஜொலித்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாலத்தில் பராமரிப்பு பணிகள் இன்றி ஏராளமான மின்விளக்குகள் பழுதாகி எரியாமல் பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது. மேலும் பாலத்தில் உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இச்சூழலில் வாகன ஓட்டிகள், மக்கள் விபத்து அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர்.
எனவே பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் பொருத்த வேணடும். சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
---