/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் விதிமீறல் 60 வழக்கு பதிவு
/
தேர்தல் விதிமீறல் 60 வழக்கு பதிவு
ADDED : ஏப் 08, 2024 11:52 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் தேர்தல் விதி மீறல்கள் குறித்து இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் மட்டும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சந்தீஷ் எஸ்.பி., தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன.
விதி மீறல்களில் ஈடுபடுவர்கள், பறக்கும் படை அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் விதி மீறல்கள் அனுமதியின்றி பிரசாரம், அரசு சுவரில் விளம்பரம், தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர்கள் வாகனங்களை பயன்படுத்துதல் போன்றவைகள், அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.
இதில் விதி மீறல்கள் செய்துள்ளதாக மாவட்டம் முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் மட்டும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விதி மீறல்கள் கண்காணிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.

