/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் பயிற்சிக்கு வராத 128 பேருக்கு மீண்டும் பயிற்சி
/
தேர்தல் பயிற்சிக்கு வராத 128 பேருக்கு மீண்டும் பயிற்சி
தேர்தல் பயிற்சிக்கு வராத 128 பேருக்கு மீண்டும் பயிற்சி
தேர்தல் பயிற்சிக்கு வராத 128 பேருக்கு மீண்டும் பயிற்சி
ADDED : மார் 31, 2024 03:26 AM
திருவாடானை, : திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கு நடந்த பயிற்சியில் கலந்து கொள்ளாத 128 பேருக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதிலும் 7 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் தேர்தல் சம்பந்தமான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் என பலரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் லோக்சபா திருவாடானை சட்டசபை தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர், 3 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணியில் இருப்பர். அதன்படி இத்தொகுதியில் 1481 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கு மார்ச் 24ல் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சி நடந்தது. அதில் 128 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு நேற்று தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். அதில் ஏழு பேர் ஆப்சென்ட் ஆகினர்.
இரண்டாம் கட்டமாக ஏப்.7, மூன்றாம் கட்டமாக ஏப்.18ல் பயிற்சி நடைபெறும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

