நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை ; திருவாடானை தாலுகாவில் பூத் சிலிப் வழங்கும் பணி நடக்கிறது.
இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில், வாக்காளர் விபரங்கள் அடங்கிய பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியுள்ளது. பி.எல்.ஓ.,க்கள் வாக்காளர்களிடம் வினியோகித்து வருகின்றனர். யாரிடமும் மொத்தமாக வழங்க கூடாது. தேர்தல் பயிற்சியில் கூறியதை பின்பற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றார்.

