/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தொடக்கப்பள்ளி தேர்வு ஏப்.23ல் இருந்து ஏப்.24க்கு மாற்றம்

ADDED : ஏப் 16, 2024 03:49 AM
தினமலர் செய்தி எதிரொலி
பரமக்குடி: -பரமக்குடி சித்திரைத் திருவிழா ஏப்.23ல் அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் நடக்க இருந்த தொடக்கப்பள்ளி தேர்வு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மாற்றப்பட்டது.
மதுரைக்கு அடுத்து பரமக்குடியில் ஏப்.23 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடக்கிறது. அன்று மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு நடக்க இருந்த தேர்வுகள் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்ட நிலையில் ஏப்.24க்கு மாற்றப்பட்டது.
இதே போல் தொடக்கப்பள்ளி தேர்வுகளில் மாற்றம் குறித்து ஏப்.14ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முருகம்மாள் ஏப்.23ல் நடக்க இருந்த தேர்வு ஏப்.24ல் நடைபெறும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
கமுதி, கடலாடி, பரமக்குடி, முதுகுளத்துார் மற்றும் போகலுார் ஆகிய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.