/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் பொந்தம்புளி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நோன்பு கஞ்சியில் அனைத்து சமுதாய மக்கள் பங்களிப்பு

ADDED : ஏப் 11, 2024 06:19 AM
பெருநாழி : பொந்தம்புளி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களிடம் நிதி பெற்று நோன்பு கஞ்சி காய்ச்சி வருகின்றனர்.
பெருநாழி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் மஸ்ஜிதுல் நுார் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் நுாற்றாண்டு காலம் பழமை வாய்ந்தது. இந்த பள்ளிவாசலில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பங்கள் உள்ளன.
பெரும்பாலான இஸ்லாமியர்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிமித்தமாக வசிக்கின்றனர். மே மாதம் நடக்கக்கூடிய கந்துாரி விழாக்களில் பங்கேற்பதற்காக ஐந்து நாட்களுக்கு சொந்த ஊர் திரும்பி விடுகின்றனர்.
ரம்ஜான் மாதம் துவங்கியதில் இருந்து நிறைவு பெறும் வரை நோன்பு கஞ்சி காய்ச்சி பிறருக்கு வழங்குவது வழக்கமான நிகழ்வாகும். இங்குள்ள பொந்தம்புளி ஊராட்சியில் அனைத்து சமுதாய மக்கள் 3000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி 30 நாட்களுக்கும் வழங்குவதற்கு நன்கொடையாளர்கள் ஆர்வமுடன் தங்களது பெயரை முதல் நாளே பதிவு செய்து கொள்கின்றனர்.
பெரிய அண்டாக்களில் காய்ச்சப்பட்டு மதியம் 4:00 மணிக்கு துாக்குவாளிகளில் பள்ளிவாசலில் இருந்து நோன்பு கஞ்சி அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஷேக் இஸ்மாயில் மற்றும் பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:
பொந்தம்புளி ஊராட்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிராம மக்கள் தங்களுடைய பங்களிப்பாக நோன்பு கஞ்சிக்கு தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் நன்கொடை வழங்குகின்றனர்.
பச்சரிசியால் அதன் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு 30 நாட்களும் தொடர்ந்து மாலை நேரத்தில் வழங்கப்படுகிறது.
மே மாதம் பள்ளிவாசலில் நடக்கும் கந்துாரி விழாவிற்காக நுாற்றுக்கு மேற்பட்ட ஆட்டு கிடாக்கள் நேர்த்திக்கடனாக வழங்கி அவற்றை சமைத்து அசைவ அன்னதானமும் வழங்கப்படுகிறது.
மாமன், மச்சான் மற்றும் சகோதரர்களாக ஒற்றுமையாக பள்ளிவாசலுக்கு அனைத்து மக்களும் சென்று நோன்பு கஞ்சி வாங்கி வருவது எங்களின் மனதிற்கு திருப்தி அளிக்கிறது என்றனர்.