/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பள்ளி அருகில் வாறுகாலில் பிளாஸ்டிக்; கொசுத் தொல்லையால் பாதிப்பு

ADDED : ஏப் 01, 2024 06:08 AM

பரமக்குடி : -பரமக்குடி தனியார் பள்ளி அருகில் வாறுகாலில் பிளாஸ்டிக் குப்பை அடைத்திருப்பதால் கொசுத் தொல்லையால் மக்கள் பாதித்துள்ளனர்.
பரமக்குடியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வார்டுககளின் கழிவுநீர் சவுராஷ்டிரா பள்ளி அருகில் உள்ள வாறுகாலில் சேர்கிறது.
இப்பகுதியில் உள்ள அனுமன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.
தொடர்ந்து நெசவாளர் குடியிருப்பு உட்பட ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது.
இந்நிலையில் வாறுகால் சுத்தம் செய்யாமல் உள்ளதால் பிளாஸ்டிக் குப்பை தேங்கியுள்ளது.
இதனால் கொசு உற்பத்தியாகி பள்ளி மாணவர்கள் கூட அருகில் உள்ளவர்கள் தொற்றுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து பூச்சிகள் உற்பத்தியாவதால் நெசவாளர் குடியிருப்புகளில் புகுந்து தறி மேடைகளை சேதப்படுத்தி வருகிறது.
ஆகவே நகராட்சி அதிகாரிகள் வாறுகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.