/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டாலங்குளத்தில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி
/
கட்டாலங்குளத்தில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஏப் 12, 2024 04:24 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே வேப்பங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கட்டாலங்குளத்தில் குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
வேப்பங்குளத்தில் இருந்து கட்டாலங்குளம் செல்லக்கூடிய 3 கி.மீ., ரோடு அமைத்து பத்தாண்டுகளுக்கும் மேலாகியுள்ளதால் குண்டும் குழியுமாக உள்ளது.
பா.ஜ., தெற்கு ஒன்றியதலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
பெருநாழியில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் கட்டாலங்குளம்அமைந்துள்ளது. இங்கு பொதுமக்கள் குடிநீர்குழாய்களில் தண்ணீர்வரத்தின்றி காட்சி பொருளாக உள்ளது.
ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். 3 கி.மீ., தொலைவிற்கான ரோடு சேதமடைந்துள்ளதால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் லோக்சபா தேர்தலுக்குப் பின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

