/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செயல்படாத குடிநீர் ஜெனரேட்டர்கள்
/
செயல்படாத குடிநீர் ஜெனரேட்டர்கள்
ADDED : ஆக 23, 2024 03:48 AM

திருவாடானை: நீரேற்று நிலையங்கள் அருகில் அமைக்கப்பட்ட ஜெனரேட்டர்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாகியுள்ளது.
திருவாடானை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மின்தடை ஏற்படும் நேரங்களில் தடையின்றி குடிநீர் சப்ளை செய்யும் வகையில் நீரேற்று நிலையங்கள் அருகில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஜெனரேட்டர்கள் செயல்படாமல் போனதால் துருப்பிடித்து வீணாகியுள்ளது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியதில் 10க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. இங்கு அனைத்து ஜெனரேட்டர்களும் வீணாகியுள்ளது. குஞ்சங்குளம் கிராம மக்கள் கூறுகையில், மின்தடை ஏற்படும் போது குடிநீர் சப்ளை செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே இயங்கியது. இதனால் பல கோடி ரூபாய் வீணாகியுள்ளது என்றனர்.

