/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எவ்வளவு வெள்ள நீர் வந்தாலும் தருவையில் சேமிக்க முடியல: வீணாக கடலில் கலக்குது கன்னிராஜபுரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
/
எவ்வளவு வெள்ள நீர் வந்தாலும் தருவையில் சேமிக்க முடியல: வீணாக கடலில் கலக்குது கன்னிராஜபுரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
எவ்வளவு வெள்ள நீர் வந்தாலும் தருவையில் சேமிக்க முடியல: வீணாக கடலில் கலக்குது கன்னிராஜபுரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
எவ்வளவு வெள்ள நீர் வந்தாலும் தருவையில் சேமிக்க முடியல: வீணாக கடலில் கலக்குது கன்னிராஜபுரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
ADDED : ஏப் 11, 2024 06:18 AM
சாயல்குடி : அக்., நவ., டிச., மாதங்களில் முறையாக பருவ மழைப் பொழிவு இருக்கும் போது 10 கி.மீ.,க்கு பயணம் செய்து மூக்கையூர் கடலில் கலந்து வீணாகிறது. வறட்சி காலங்களில் தண்ணீருக்காக தவம் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதியான கன்னிராஜபுரம் ஊராட்சி பகுதியில் பருவ மழை காலங்களில் பெருவாரியான வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன்னிராஜபுரம் அருகே உள்ள குறுக்கனாற்று படுகையில் இருந்து பிரிந்து ஓடும் வெள்ள நீர் நேரடியாக துாத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடலில் கலந்து வீணாகிறது.
அதன் கிளை தொடர்ச்சியாக கன்னிராஜபுரம் தரவைப் பகுதியில் இருந்து குறுக்கனாற்று வழித்தடத்தில் உள்ள தருவைப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய வெள்ள நீர் கன்னிராஜபுரம் ஊராட்சி மற்றும் நரிப்பையூர் ஊராட்சி வழியாக கடந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள மூக்கையூரில் கடலும் ஆறும் சேரக்கூடிய கழிமுகத்துவாரத்தில் கலந்து வீணாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில் நீரைத் தேக்க முடியாமல் கடலுக்குச் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் கோடை காலங்களில் வெகுவாக குறைகிறது.
தேர்தல் காலங்களில் தீர்வு காண வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் வாய் மூடி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் கூறியதாவது:
கன்னிராஜபுரம் தருவையில் உள்ள குறுக்கனாற்று பகுதியில் இருந்து வரக்கூடிய வெள்ள நீரை சேமித்து வைத்தால் இப்பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருக்காது. கன்னிராஜபுரம் மற்றும் நரிப்பையூர் பகுதிகளில் ஏராளமான குடிநீர் கிணறுகள் உள்ளன.
இங்கு இருந்து டிராக்டர் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தரவையில் அதிகளவு தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. அவற்றை முறையாக களை எடுக்க வேண்டிய பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கடந்த 2019ல் கன்னிராஜபுரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்திருந்த நவாஸ்கனி எம்.பி., எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். பொது மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
நீண்ட நெடிய தரவைப் பகுதியின் இரு புறங்களிலும் கரைகளை பலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் வைத்திருந்தால் கடலுக்கு வீணாக தண்ணீர் செல்லாமல் தேக்கலாம். இதனால் கோடையிலும் தண்ணீர் பிரச்னை வராது.
எனவே லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தரவையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தரமான தடுப்பணையை ஏற்படுத்தி நீரை தேக்குவதற்கும் வழிவகை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

