/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பங்குனி விழாவில் கண்ணன் அலங்காரத்தில் முத்தாலம்மன்
/
பங்குனி விழாவில் கண்ணன் அலங்காரத்தில் முத்தாலம்மன்
பங்குனி விழாவில் கண்ணன் அலங்காரத்தில் முத்தாலம்மன்
பங்குனி விழாவில் கண்ணன் அலங்காரத்தில் முத்தாலம்மன்
ADDED : மார் 23, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நேற்று காலை கண்ணன் திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
இக்கோயிலில் பங்குனிவிழா மார்ச் 17ல் துவங்கி நடக்கிறது.
நேற்று காலை பட்டுப்பல்லக்கில் அம்மன் தவழும் கண்ணனாக ஒரு கையில் புல்லாங்குழல் ஏந்தியும், மறு கையில் வெண்ணை குடத்தை சுமந்தும் வீதி வலம் வந்தார்.
நாளை (மார்ச் 24) இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
தொடர்ந்து மார்ச் 25 இரவு மின்தீப அலங்கார தேரில் வலம் வருகிறார். இதனையொட்டி நேற்று தேருக்கு முகூர்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது.