/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் வாகன ஓட்டிகள் திணறல்
/
பரமக்குடி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் வாகன ஓட்டிகள் திணறல்
பரமக்குடி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் வாகன ஓட்டிகள் திணறல்
பரமக்குடி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஏப் 04, 2024 11:35 PM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு நெடுஞ்சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் 40 அடி ரோடு 20 அடியாக சுருங்கி, போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் மதுரை, ராமநாதபுரம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டு மக்களும் பஜார் பகுதியில் செல்ல பிரதான வழியாக ஆர்ச் மற்றும் கீழ பள்ளி வாசல் ரோடு உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள ஆர்ச் ரோடு 40 அடிக்கு மேல் அகலமாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தி வைப்பதால் 20 அடி வரை சுருங்குகிறது.
டூவீலர், ஆட்டோ உட்பட இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானவர் சென்று வருகின்றனர். ஆர்ச் ரோட்டில் கமிஷன் கடைகளும் அதிகமாக உள்ளதால் கனரக லாரிகள் நாள் முழுவதும் செல்லும்படி உள்ளது.
இதனால் சந்திப்பு ரோட்டில் தொடர் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இப்பகுதியில் போலீசார் பணியில் ஈடுபட்டாலும் நாள் முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே ஆர்ச் ரயில்வே ஸ்டேஷன் ரோடு சந்திப்பில் சிக்னல்களை பொருத்துவதுடன், வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தி வைப்பதை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

