/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறாது
/
தேர்தல் முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறாது
தேர்தல் முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறாது
தேர்தல் முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறாது
ADDED : மார் 31, 2024 03:23 AM
திருவாடானை, : தேர்தல் முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு இல்லை என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருவாடானை மின்வாரியம் சார்பில் ஒவ்வொரு துணை மின்நிலையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் மாதம் ஒரு நாள் அல்லது தேவைப்படும் நாட்களில் மின் சப்ளை நிறுத்தம் செய்து மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் திருவாடானை, தொண்டி, நகரிகாத்தான், ஆனந்துார், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் ஆகிய ஊர்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன.
இங்கு லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பராமரிப்பு பணிகளை மின்வாரியத்தினர் திட்டமிட்டு செய்து முடித்துள்ளனர்.
மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், பள்ளிகளில் தேர்வு அதன் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தலும் நடக்கவுள்ளது. ஆகவே மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த பின் வழக்கம் போல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

