/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து குறைவால் எலுமிச்சைவிலை உயர்வு: கிலோ ரூ.120
/
வரத்து குறைவால் எலுமிச்சைவிலை உயர்வு: கிலோ ரூ.120
ADDED : மார் 23, 2024 05:24 AM

ராமநாதபுரம்: வெளியூர்களிலிருந்து எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்துள்ளதால், கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்கின்றனர்.
இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து காய்கறி, பழங்களை மொத்தமாக வாங்கி வந்து ராமநாதபுரம் சந்தைகளில் வியாபாரிகள் விற்கின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வெளியூர் வரத்து குறைந்துள்ளது.
இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.70க்கு விற்ற எலுமிச்சை கிலோ ரூ.100 முதல் ரூ.120 விற்கப்படுகிறது என வியாபாரிகள் கூறினர்.

