/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலந்தை செடி முள் மீது படுத்து பூஜாரி அருள்வாக்கு
/
இலந்தை செடி முள் மீது படுத்து பூஜாரி அருள்வாக்கு
ADDED : ஆக 19, 2024 07:18 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கோயில் விழாவில் பூஜாரி சுந்தர்ராஜ் இலந்தை செடி முள் மீது படுத்து அருள்வாக்கு கூறினார்.
பாம்புல்நாயக்கன்பட்டியில் உள்ள கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் அக்னிசட்டி,ஆயிரம் கண் பானை மற்றும் பக்தர்கள் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர்.
நேற்று வினோதமான முறையில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முக்கிய நிகழ்ச்சியாக அதே கிராமத்தைச் சேர்ந்த பூஜாரி சுந்தர்ராஜ் விவசாய நிலத்தின் அருகே இலந்தை செடிமுள் மீது படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
கமுதி அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.

