/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நலத்திட்ட உதவி படங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் ஆசிரியர்கள் கொதிப்பு

ADDED : ஜூன் 30, 2024 02:37 AM
ராமநாதபுரம்,:மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது ஆசிரியர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் எமிஸ் தளம் உள்ளது. இதில் 1.50 கோடி மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எமிஸ் தளத்தில் டி.என்.எஸ்.இ.டி., ஸ்கூல் ஆப் என்று உள்ளது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் ஆசிரியர்கள் வழங்கும் போது அதனை மாணவருடன் சேர்த்து புகைப்படம் எடுத்து இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யவேண்டும் எனபள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நோட்டு, புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், சைக்கிள் என ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவேற்றம்செய்ய வேண்டும்.
ஏற்கனவே இந்த ஆப்பில்நெட்வொர்க் சரி வர கிடைப்பதில்லை. இந்நிலையில் ஆசிரியர்கள் போட்டோ எடுத்து இதில் பதிவேற்றம்செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு வகுப்புக்கு 50 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆசிரியர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை எடுத்து பதிவேற்றம்செய்ய வேண்டியிருக்கும். இதனால் கற்பிக்கும் பணி பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.