/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புயல் கால சேமிப்பு நிதி செலுத்த அரசு உத்தரவு: மீனவர்கள் தவிப்பு
/
புயல் கால சேமிப்பு நிதி செலுத்த அரசு உத்தரவு: மீனவர்கள் தவிப்பு
புயல் கால சேமிப்பு நிதி செலுத்த அரசு உத்தரவு: மீனவர்கள் தவிப்பு
புயல் கால சேமிப்பு நிதி செலுத்த அரசு உத்தரவு: மீனவர்கள் தவிப்பு
ADDED : மே 23, 2024 03:01 AM
ராமேஸ்வரம்: மீனவர்களுக்கான புயல் கால சேமிப்பு நிதியை வங்கியில் செலுத்த மீன்துறை உத்தரவிட்டதால் மீன்பிடி தடையால் வருவாய் இன்றி மீனவர்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் அக்., முதல் டிச., வரை கடலில் இயற்கை சீற்றம், புயல் வீசும். அப்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழல் எழுவதால் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் மீனவர்கள் சேமிப்பு தொகை சேர்த்து ரூ.4500 ஐ ஒவ்வொரு ஆண்டும் அக்., நவ.,ல் மீனவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக தமிழக அரசு வழங்குகிறது.
இந்நிலையில் மீனவர்களின் சேமிப்பு தொகை ரூ.1500 ஐ மே 30ல் செலுத்த மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்துறை உத்தரவிட்டது. வழக்கமாக மீன்பிடி தடை நாள்கள் முடிந்து ஜூன் மாதத்திற்கு பின் இத்தொகையை மீனவர்கள் செலுத்துவது வழக்கம்.
தற்போது முன்கூட்டியே செலுத்த உத்தரவிட்டுள்ளதால் மீன்பிடி தடை நாளில் வருவாய் இன்றி தவிக்கும் இச்சமயத்தில் அன்றாட குடும்பச் செலவுக்கே திணறி வருவதாகவும், இச்சூழலில் சேமிப்புத் தொகையை எப்படி செலுத்த முடியும்.
எனவே ஜூலை 10க்குள் சேமிப்பு பணத்தை செலுத்த அவகாசம் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

