/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயன்பாடின்றி வீணாகும் குப்பைத் தொட்டிகள்
/
பயன்பாடின்றி வீணாகும் குப்பைத் தொட்டிகள்
ADDED : ஏப் 12, 2024 04:31 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உள்ள குப்பைத்தொட்டிகள்சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் கண்ட இடங்களில் குப்பை கொட்டாமல் தடுப்பதற்காக இரும்பு குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டது. தற்போது முதுகுளத்துார் ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் பல கிராமங்களில் சேதமடைந்து பயன்பாடியின்றி வீணாகியது.
இதனால் மக்கள் வேறு வழியின்றி குப்பையை ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். காற்றில் இவை பறக்கிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

