/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நொச்சி ஊருணி முழுவதும் கரையாத விநாயகர் சிலைகள்
/
நொச்சி ஊருணி முழுவதும் கரையாத விநாயகர் சிலைகள்
ADDED : செப் 10, 2024 11:58 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் நொச்சி ஊருணியில் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டன. ஊருணியில் போதுமான தண்ணீர் இன்றி சிலைகள் சரிவர கரைக்கப்படாமல் அப்படியே கிடப்பதால் மழை பெய்தால் நீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரஷ்திடை செய்து வழிப்பட்டனர். இந்த சுவாமி சிலைகள் நேற்று முன்தினம் நொச்சி ஊருணியில் கரைக்கப்பட்டன.
அங்கு போதுமான தண்ணீர் இல்லாததால் சில சிலைகள் முழுமையாக கரைக்கப்படாமல் கிடக்கின்றன. மழை பெய்தால் நொச்சி ஊருணியில் நீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே ஊற்று தோண்டி சிலைகளை முழுமையாக கரைக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

