/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்ற பின் நன்றி சொல்ல கூட வரல முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு

ADDED : ஏப் 08, 2024 05:24 AM
முதுகுளத்துார், : -ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி நன்றி சொல்ல கூட கிராமத்திற்கு வரவில்லை என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி முதுகுளத்துார் சட்டசபை தொகுதி முதுகுளத்துார் ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். முதுகுளத்துார் அருகே வளநாடு, தேரிருவேலி, காக்கூர், சாம்பக்குளம், கீழத்துாவல், கீழக்கன்னிச்சேரி, செல்வநாயகபுரம் உட்பட பல கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கீழத்துாவலில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,, ஜெ., கண்டெடுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி நன்றி சொல்ல கூட கிராமத்திற்கு வரவில்லை.
ஆனால் மீண்டும் ஓட்டு கேட்டு வருகிறார் என்றார். அமைச்சரின் பேச்சை கேட்ட கிராம மக்கள் ஆமாம் என்று கூறி ஒரே வரியில் பதில் அளித்தனர்.
மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.