/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
/
எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
ADDED : மே 23, 2024 02:56 AM
திருவாடானை:புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் திருவாடானை ஒன்றியத்தில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. எழுதப் படிக்க தெரியாத 400 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்க புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ள்ளது.
இதில் எண்களை அறிமுகம் செய்தல், வாசிக்க கற்றுத்தருதல், அடிப்படை விண்ணப்பம் பூர்த்தி செய்தல் என தினமும் இரண்டு மணி நேரம் ஆறு மாதத்திற்கு வகுப்புகள் நடக்கும். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 60 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று எழுதப்படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 400 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இப்பணிகளில் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

