/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் மன்னன் கஜினி முகமது குடத்துடன் வந்து மனு தாக்கல்
/
தேர்தல் மன்னன் கஜினி முகமது குடத்துடன் வந்து மனு தாக்கல்
தேர்தல் மன்னன் கஜினி முகமது குடத்துடன் வந்து மனு தாக்கல்
தேர்தல் மன்னன் கஜினி முகமது குடத்துடன் வந்து மனு தாக்கல்
ADDED : மார் 28, 2024 01:47 AM

ராமநாதபுரம்:சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் இதுவரை 21 முறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்த கஜினிமுகமது என்றழைக்கப்படும் பானை மணி 79, நேற்று 22வதுமுறையாக குடத்தை சுமந்தபடி வந்து ராமநாதபுரம் லோக்பா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம்மாவட்டம் சோழந்துாரை சேர்ந்தவர் பானை அ.மணி. இவர் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
இதுவரை 21 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தும் தொடர்ந்து தேர்தலில் நிற்பதால் இவரை கஜினிமுகமது, தேர்தல் மன்னன் என்று அழைக்கின்றனர்.
அவர் நேற்றுமதியம் தலையில் குடத்தை சுமந்து வந்து ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்தார். அவரை போலீசார் தடுத்து குடத்துடன் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
இதையடுத்து அவர் குடத்தை வெளியே வைத்து விட்டு தேர்தல் அலுவலர் விஷ்ணுசந்திரனிடம்மனு தாக்கல் செய்தார். பானை மணி கூறுகையில் ''கடந்த 40 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இது 22 வதுதேர்தல். பள்ளிகளுக்கு போதிய கட்டடங்கள்,ஆசிரியர்கள் இல்லை. கிராமங்களுக்கு பஸ்வசதி இல்லை. குடிநீர்கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். வெற்றி பெற்றால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என்றார்.

