/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் சுருங்குது தவிப்பில் டிரைவர், கண்டக்டர்
/
சாயல்குடி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் சுருங்குது தவிப்பில் டிரைவர், கண்டக்டர்
சாயல்குடி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் சுருங்குது தவிப்பில் டிரைவர், கண்டக்டர்
சாயல்குடி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் சுருங்குது தவிப்பில் டிரைவர், கண்டக்டர்
ADDED : மே 02, 2024 05:09 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடியால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தவிக்கின்றனர். சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் ஒன்றரை ஏக்கரில் அமைந்துள்ளது.
மதுரை, அருப்புக்கோட்டை, திருச்செந்துார், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திசையன்விளை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், துாத்துக்குடி, கடலாடி, முதுகுளத்துார், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் வந்து செல்லக்கூடிய பிரதான பஸ் ஸ்டாண்டாக விளங்குகிறது.
பஸ் ஸ்டாண்டின் இரு புறங்களிலும் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. கட்டடங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை காட்டிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் பஸ் ஸ்டாண்டின் பரப்பளவு வெகுவாக சுருங்கி வருகிறது. சாயல்குடியைச் சேர்ந்த பா.ஜ., விவசாய அணி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
நாள்தோறும் ஏராளமான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். அதிக பஸ்கள் வரும்போது நிறுத்துவதற்கு இடமில்லாமல் கடைகளை ஒட்டி நிறுத்தும் போது அங்குள்ள பொருள்களுக்கு சேதம் ஏற்படுவதால் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் உள்ளே செல்லும் வழி மற்றும் திரும்பிச் செல்லும் வழியில் போதிய இடவசதி இன்றி உள்ளது. நோ பார்க்கிங் ஏரியாவில் டூவீலர்களை நிறுத்தி செல்வதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப இட வசதியின்றி நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர், போலீசார் இணைந்து பஸ்ஸ்டாண்ட் மற்றும் பிரதான சாலையோர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

