/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொகுதியில் குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பன்னீர்செல்வம் பேச்சு
/
தொகுதியில் குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பன்னீர்செல்வம் பேச்சு
தொகுதியில் குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பன்னீர்செல்வம் பேச்சு
தொகுதியில் குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும்: பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஏப் 10, 2024 06:09 AM

ஆர்.எஸ்.மங்கலம் : தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தின் போது பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.,கூட்டணி கட்சி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:
ராமநாதபுரம் தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்கு மக்கள் படும் சிரமத்தை சுற்றுப்பயணத்தின் போது பார்த்து வருகிறேன்.
நான் இத்தொகுதியில் இருந்து எம்.பி., ஆக வெற்றி பெற்றதும், முதலில் ராமநாதபுரம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க பிரதமருடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதே எனது முதல் வேலை.
அடுத்து அ.தி.மு.க., வை அபகரித்துள்ள பழனி சாமியிடம் இருந்து அ.தி.மு.க., வை மீட்டு கட்சியை அடிமட்ட தொண்டர்களிடம் ஒப்படைப்பேன். பல்வேறு துரோகங்களை செய்த பழனிசாமி தற்போது தனக்கு எதிராக ஐந்து பன்னீர் செல்வங்களை சுயேச்சை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்.
தொடர்ந்து துரோகத்தை செய்து வரும் பழனிசாமிக்கு ராமநாதபுரம் தொகுதி மக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும். தொகுதி குடிநீர் பிரச்னை மற்றும் அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க எனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
ராதானூர், ஆனந்துார், சனவேலி, பாரனுார் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
நவபாஷாண கோயிலில் தரிசனம்
ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்த பன்னீர்செல்வம் முன்னதாக நேற்று மாலை தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நடைமேடை வழியாக நவக்கிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்தார். அவருக்கு அப்பகுதியில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
ஜான்பாண்டியன் ஓட்டுசேகரிப்பு
ராமநாதபுரம் அரண்மனையில் நேற்று இரவு 7:00 மணிக்கு பன்னீர் செல்வத்தை ஆதரித்து பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் ஜான்பாண்டியன் பேசினார்.
அவருடன் பன்னீர்செல்வம் இருந்தார். தொடர்ந்து இரவு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஜான்பாண்டியனுடன் ஓட்டு சேகரித்தார்.

