/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி- -குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க.,அரசு முடக்கியுள்ளது: பிரேமலதா
/
காவிரி- -குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க.,அரசு முடக்கியுள்ளது: பிரேமலதா
காவிரி- -குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க.,அரசு முடக்கியுள்ளது: பிரேமலதா
காவிரி- -குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க.,அரசு முடக்கியுள்ளது: பிரேமலதா
ADDED : ஏப் 14, 2024 04:03 AM
கமுதி: விவசாயிகளின் நலன் கருதி அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி--வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க., அரசு முடக்கியுள்ளதாக தே.மு.தி.க.,பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து கமுதியில் அவர் பேசியதாவது:
கட்சிக்கு முக்கியமானது சின்னம். அந்த சின்னம் எந்த வேட்பாளரிடம் உள்ளதோ அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க.,--தே.மு.தி.க., மக்கள் போற்றும் கூட்டணியாக அமைந்துள்ளது. மீனவர்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் களம் கண்டு டில்லி வரை சென்று மீனவர்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த்.
மீனவர்களுக்கு பிரச்னை என்றால் களத்தில் நிற்கும் கட்சி அ.தி.மு.க., மற்றொன்று தே.மு.தி.க., கச்சத்தீவை தி.மு.க., காங்., சேர்ந்து இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது. இதனால் தான் மீனவர்களுக்கான பிரச்னை பெரிய அளவில் போய்க் கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாள் பேசாமல் இருந்து விட்ட பிரதமர் மோடி தற்போது தான் கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார்.
இது ஒரு கண் துடைப்பு நாடகம். விவசாயிகளின் நலன் கருதி அ.தி மு.க., ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட காவிரி--குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க., அரசு முடக்கியுள்ளது.
இதே போல் பல்வேறு திட்டங்களையும் முடக்கியது.
தி.மு.க., தமிழகம் முழுவதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு இன்று வரை மக்களை ஏமாற்றி வருகிறது. இதே போன்று பெண்களை கீழ்த்தரமாக பேசிய கட்சி தி.மு.க.,என்றார்.

