/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துப்பட்டினம் ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம்; அரசியல் கட்சிகளின் பொய் பிரசாரம்
/
முத்துப்பட்டினம் ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம்; அரசியல் கட்சிகளின் பொய் பிரசாரம்
முத்துப்பட்டினம் ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம்; அரசியல் கட்சிகளின் பொய் பிரசாரம்
முத்துப்பட்டினம் ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம்; அரசியல் கட்சிகளின் பொய் பிரசாரம்
ADDED : ஏப் 03, 2024 06:53 AM
ஆர்.எஸ்.மங்கலம் : பல ஆண்டுகளாக முத்துப்பட்டினம் ரோடு சீரமைக்கப்படாததால் கிராமத்தினர் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் வழியாக இளையான்குடி செல்லும் ரோடு, செங்குடி விலக்கில் இருந்து முத்துப்பட்டினம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக எட்டியதிடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
முத்துப்பட்டினத்தில் உள்ள அந்தோணியார் சர்ச் பிரசித்தி பெற்று விளங்குவதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் முத்துப்பட்டினத்திற்கு செல்லும் ரோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் கிராமத்தினர் சிரமம் அடைகின்றனர். கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் நேரங்களில் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றதும் சாலையை உடனடியாக சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்றனர்.
வெற்றி பெற்று அடுத்த லோக்சபா தேர்தல் வந்த நிலையிலும் ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் கிராமத்தினர் ஆளும் அரசியல் கட்சியினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது ஓட்டு சேகரிக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதி போல் தற்போதும் கூறுகின்றனர்.
வெற்றி பெற்றதும் ரோட்டை சீரமைத்து தருவதாகக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர். அரசியல் கட்சியினரின் பொய் பிரசாரம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

