/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உரியகாலத்திற்குள் வளர்ச்சி பணிகளை முடிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

ADDED : செப் 16, 2024 05:52 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் வளர்ச்சி திட்ட பணிகளை உரியகாலத்திற்குள்
முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
அப்போது பிரபக்கலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், கிராம செயலக கட்டடம்,மீசல் கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளிட்ட பணிகள் ரூ.71 லட்சத்து 38ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்பு பணிகளை உரிய காலத்திற்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வப்போது பணிகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பி.டி.ஓ., அன்புகண்ணன், பொறியாளர் சுபாஷ்குமார் பங்கேற்றனர்.