/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் குழாய் அமைக்க கோரிக்கை
/
காவிரி குடிநீர் குழாய் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 28, 2024 04:02 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு கடலாடி ரோட்டில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
பேரூராட்சி சார்பில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த குடிநீர், கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதனால் மக்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போது கரூர் கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கும் பணி முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. அருகில் உள்ள தெருக்களுக்கு புதிதாக குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் எங்கள் பகுதிகளில் குழாய் அமைக்காமல் புறக்கணித்துள்ளனர். இதனால் எந்தவித குடிநீர் வசதிகளின்றி தவிக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து காவிரி குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்.
இதேபோன்று முதுகுளத்துார் பேரூராட்சி சுவாமிகள் மடத் தெருவில் விடுபட்டுள்ள வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கரூர் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
கொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்து விடுபட்டுள்ள அனைத்து பகுதிகளுக்கும் குழாய் அமைக்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.

