/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆற்றுக்குள் சிதைந்த நிலையில் பெண் உடல்;கொலையா, தற்கொலையா என விசாரணை

ADDED : ஏப் 01, 2024 06:14 AM

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் சிதைந்த நிலையில் பெண் உடல் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.
பரமக்குடி நகராட்சி எல்லை நிறைவடையும் வைகை ஆற்றுப்பகுதியில் பெண் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.
எமனேஸ்வரம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டனர்.
இறந்த பெண்ணின் அருகில் எலி பேஸ்ட் மற்றும் மருந்துகள் கிடந்தன.
அவற்றை கைப்பற்றி உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் மார்ச் 26ல் கீழத்துவல் போலீசில் பெண் ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கீழத்துாவல் கணேசன் மனைவி கண்ணகி 55, என தெரிய வந்தது. குடும்ப பிரச்னையில் 26ம் தேதி வீட்டை விட்டு வந்ததாக தெரிவித்தனர்.
வைகை ஆற்றில் உடல் சிதைந்து கருகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் முழு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறினர்.