/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாய்ந்த மின்கம்பத்தால் ஆபத்து; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
/
சாய்ந்த மின்கம்பத்தால் ஆபத்து; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
சாய்ந்த மின்கம்பத்தால் ஆபத்து; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
சாய்ந்த மின்கம்பத்தால் ஆபத்து; சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2024 11:03 PM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் 4வது வார்டில், வாய்க்கால் பகுதியில் சாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட, புல்லமடை ரோடு தனியார் மஹால் பகுதியை ஒட்டி செல்லும் வாய்க்கால் பகுதியில், ஆபத்தான நிலையில் சாய்ந்த நிலையில் உயர் மின்னழுத்த மின்கம்பம் உள்ளது.
பெரிய கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை ஒட்டி உள்ள இந்த மின்கம்பம் கடந்த சில ஆண்டுகளாக சாய்ந்து கீழே விழும் நிலையில் இருபுறமும் உள்ள கம்பிகளின் இழுவிசையில் நின்று கொண்டுள்ளது.
இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளதுடன், தண்ணீர் செல்லும் வாய்க்காலை முறையாக தூர் வாருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரியத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

