/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் தடுப்பு கம்பிகள் சேதம்
/
பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் தடுப்பு கம்பிகள் சேதம்
பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் தடுப்பு கம்பிகள் சேதம்
பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் தடுப்பு கம்பிகள் சேதம்
ADDED : ஜூன் 14, 2024 10:21 PM

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டோரம் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ள நிலையில் காணாமல் போகும் முன் அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
பரமக்குடி நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வைகை ஆறு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
அப்போது காட்டுப்பரமக்குடி துவங்கி ஐ.டி.ஐ., பகுதியை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ரோடு அமைக்கப்பட்டது.
இதன்படி வைகை ஆற்றில் வாகனங்கள் விபத்திற்குள்ளாவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தினந்தோறும் டூவீலர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் செல்வதால் ரோடு பிஸியாக காணப்படுகிறது.
ரோட்டோரங்களில் சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள் அடர்ந்து வருகிறது.
இங்கு தடுப்பு கம்பிகளை சமூக விரோதிகள் மற்றும் உ.பா., பிரியர்கள் சேதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். எனவே விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உடனடியாக தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
மேலும் வரும் கம்பிகள் திருடு போகும் நிலை உள்ளதால் உடனடியாக அவற்றை கண்காணிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

