/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குழப்பம் அடிப்படை வசதிகளின்றி அவதி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குழப்பம் அடிப்படை வசதிகளின்றி அவதி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குழப்பம் அடிப்படை வசதிகளின்றி அவதி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குழப்பம் அடிப்படை வசதிகளின்றி அவதி
ADDED : ஏப் 20, 2024 04:55 AM
பரமக்குடி: ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி சட்டசபை தொகுதியில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இடம் மாற்றி வைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தொகுதி முழுவதும் பெரும்பாலான ஓட்டு சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டதால் வாக்காளர்கள் அவதி அடைந்தனர்.
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் வீல் சேர் வசதியின்றி, யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் மூதாட்டி படியில் பேத்தியின் உதவியுடன் சிரமப்பட்டு வந்தார்.
பரமக்குடி அருகே வேந்தோணி ஊராட்சி தொடக்க பள்ளியில் முதியவர்கள் வாக்களிக்க செல்ல வசதியின்றி சிரமம் அடைந்தனர். இதே போல் பல்வேறு ஓட்டு சாவடி மையங்களில் குடிநீர் வசதிகள் இல்லை.
*ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 25 பேர் போட்டியில் உள்ள நிலையில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை இடமாற்றி வைத்ததால் பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது.
பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் இடதுபுறம் வைக்க வேண்டிய இயந்திரம் வலது புறத்திலும், வலது புறம் வைக்க வேண்டியது இடது புறத்திலும் இருந்ததால் வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இதே போல் மேலும் சில இடங்களிலும் குழப்பம் ஏற்பட்டது. தாசில்தார் சாந்தியிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சீர் செய்தனர்.
பரமக்குடி அலங்கார மாதா உயர்நிலைப்பள்ளி, நாகாச்சி ஊராட்சியில் குறிப்பிட்ட ஓட்டுசாவடிகளில் பணப் பட்டுவாடா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
*எமனேஸ்வரம் எஸ்.என்.வி., மேல்நிலைப் பள்ளியில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறால் 40 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
*தேசிய ஜனநாயக கூட்டணி திருவள்ளூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி தனது சொந்த கிராமமான பரமக்குடி அருகே எஸ்.காவனுாரில் ஓட்டளித்தார்.
*பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தினைக்குளம் கிராமத்தில் ஓட்டளித்தார்.பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, சேதுபதிநகர் நகராட்சி பள்ளியில் ஓட்டளித்தார்.
மார்க்கரில் சின்னங்கள்அழிப்பு: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சி பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தை தவிர்த்து மற்ற அனைத்து சுயேச்சை பன்னீர்செல்வங்களின் சின்னங்களை மார்க்கர் மூலம் மறைத்து வைத்திருந்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து சிறிது நேரத்திற்கு பின் அங்குள்ள வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் நிலைமையை சீர் செய்தனர்.

