/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தொடர் மழையால் அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி
/
பரமக்குடியில் தொடர் மழையால் அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி
பரமக்குடியில் தொடர் மழையால் அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி
பரமக்குடியில் தொடர் மழையால் அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி
ADDED : மே 19, 2024 11:25 PM

பரமக்குடி: பரமக்குடியில் கடந்த சிலநாட்களாக மழையால் அக்னி நட்சத்திர வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
பரமக்குடியில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. மே 4ல் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மே 28 வரை என தொடர்ந்து 24 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம்.
இதனிடையே மே 11 மதியம் 50 மி.மீ., பரமக்குடியில் மழை கொட்டியது. மேலும் மாவட்டத்தில் மழை அறிவிப்பு இருந்தாலும் அனல் ஒருபுறம் தாக்கி வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. நேற்றும் மழைபெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதே போல் மே 10ல் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், மே 14 முதல் பரமக்குடி வைகை ஆற்றில் செல்கிறது.
இதனால் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அக்னி நட்சத்திர வெயிலில் தவித்த நிலையில் குளிர்ச்சியான சூழலால் நிம்மதி அடைந்துள்ளனர்.

