/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சி நலத்திட்டங்களுக்காக கிடைத்த வெற்றி நவாஸ்கனி எம்.பி., பேட்டி

ADDED : ஜூன் 05, 2024 12:05 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடத்தும் சிறப்பான ஆட்சி, நலத்திட்டங்களுக்காக மக்கள் மாபெரும் வெற்றியை தந்துள்ளனர் என்று நவாஸ்கனி எம்.பி., தெரிவித்தார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அவர் ஓட்டு எண்ணும் மையத்தில் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் நடத்தும் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களுக்காக மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றி இது.
இங்கு ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டி உள்ளது. பாசிச பா.ஜ., ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர்.
ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலையோர ரயில் போக்குவரத்து திட்டம் துவங்கவும், படித்த இளைஞர்கள், பெண்களின் நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை அமைக்கவும், ராமேஸ்வரம் ஆன்மிக தேசிய சுற்றுலா தலம் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்டம் வர்த்தக மாவட்டமாக இருப்பதாலும் விமான போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.