/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேக்கமடைந்துள்ள பல வழக்குகளுக்கு தீர்வு காண்பதே சமரச மையத்தின் நோக்கம் முதன்மை நீதிபதி குமரகுரு பேச்சு

ADDED : ஏப் 08, 2024 11:55 PM

ராமநாதபுரம் : தேக்கமடைந்துள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதே சமரச தீர்வு மையத்தின் நோக்கமாகும் என மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு பேசினார்.
ராமநாதபுரத்தில் சமரச தின விழிப்புணர்வு வாரம் ஆண்டு தோறும் ஏப்.8 முதல் 12 வரை நடக்கிறது. இதில் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நீதிமன்றத்தில் நடந்த விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதே சமரச மையத்தின் நோக்கம். வழக்குகளால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
சமரச தீர்வாளர்களுக்கு 48 மணி நேர பட்டறிவு பயிற்சி நீதியரசர்கள், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களால் வழங்கப்பட்டது.
அதனை சமரச தீர்வுமையத்தில் தீர்வாளர்களாக அமரும் போது கடைப்பிடிக்க வேண்டும். வழக்காடியும், எதிராளிகளும் நேருக்கு நேர் அமர்ந்து பேசும் போது தீர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சமரச தீர்வு மையத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் பாதிக்கப்படாது என்பதை வழக்காளர்களுக்கு எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பி.சி.கோபிநாத், தலைமை குற்றவியல் நீதிபதி கே.கவிதா, ஒருங்கிணைப்பாளரும் சார்பு நீதிபதியுமான சி.கதிரவன், நீதித்துறை முதலாவது நடுவர் நிலவேஸ்வரன், இரண்டாம் எண் நடுவர் பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின்வெஸ்டா, வழக்கறிஞர் சங்கத்தலைவர் ேஷக்இப்ராஹிம் உட்பட பலர் பங்கேற்றனர்.